உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்றும் வாகனங்களை வழங்கும் பணக்கார நாடு!
சுவிட்சர்லாந்து அரசு, உக்ரைனுக்கு மூன்று கண்ணிவெடிகளை அகற்றும் வாகனங்களை (demining vehicles) வழங்க தீர்மானித்துள்ளது.
லோசானில் நடந்த கண்ணிவெடிகள் அகற்றும் உதவி மாநாட்டின் தொடக்கத்தில், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வியோலா அம்ஹேர்ட் (Viola Amherd) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த வாகனங்களை சுவிட்சர்லாந்து நிறுவனமான Global Clearance Solutions (GCS) தயாரிக்கிறது.
இந்த நிறுவனம் ஐக்கிய நாடுகள் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.
ஜனாதிபதி வியோலா, உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் பேசுகையில், இந்த வாகனங்கள் சுயாதீனமான, பாதுகாப்பான கண்ணிவெடிகள் அகற்றும் செயல்பாடுகளை அதிக செயற்பாட்டுடன் முன்னெடுக்க உதவும் என தெரிவித்தார்.
GCS நிறுவனம் 2025க்குள் உக்ரைனில் 100 கண்ணிவெடிகள் அகற்றும் வாகனங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும், 2027வரை 100 மில்லியன் சுவிஸ் பிரான்க் (ஏறக்குறைய 118 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உதவியை சுவிட்சர்லாந்து, உக்ரைனில் மனிதாபிமான கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக ஒதுக்கியுள்ளது.
2023-ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து அரசு நான்கு ஆண்டு கால உதவி திட்டத்தை ஒப்புதல் அளித்தது. இதற்கு கூடுதலாக, சுவிட்சர்லாந்து கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு திட்டங்களிலும் பங்கேற்கிறது.
அதேபோல், லிதுவேனியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை அக்டோபர் மாத தொடக்கத்தில் உக்ரைனின் கண்ணிவெடிகள் அகற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய 22 மில்லியன் யூரோ மதிப்புள்ள உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |