சுவிட்சர்லாந்து-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: சுங்கவரி குறைப்பு, 200 பில்லியன் டொலர் முதலீடு உறுதி
சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா, வெள்ளிக்கிழமை ஒரு புதிய கட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.
இதன்படி, அமெரிக்கா சுவிஸ் பொருட்களுக்கு விதித்திருந்த 30 சதவீத சுங்கவரியை 15 சதவீதமாக குறைத்துள்ளது.
அதேசமயம், சுவிஸ் நிறுவங்கள் 2038-க்குள் அமெரிக்காவில் 200 பில்லியன் டொலர் மதிப்பிலான முதலீட்டை செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் சம நிலைக்கு கொண்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே 15 சதவீத சுங்கவரி விகிதத்தில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

சுவிஸ் பொருளாதார அமைச்சர் Guy Parmelin, "இது எங்கள் தொழில்துறைக்கு மிகப்பெரிய நிவாரணம். சுமார் 40 சதவீத சுவிஸ் ஏற்றுமதி இதனால் பாதிக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer, "இந்த ஒப்பந்தம் நீண்டகால தடைகளை அகற்றி அமெரிக்க பொருட்களுக்கு புதிய சந்தைகளைத் திறக்கும், சுவிஸ் முதலீடுகள், குறிப்பாக மருந்துகள், மருத்துவ சாதனங்கள், விண்வெளி மற்றும் தங்க உற்பத்தி துறைகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்" என தெரிவித்துள்ளார்.
சுவிஸ் தொழில்துறை அமைப்புகள், இது ஐரோப்பிய ஒன்றிய போட்டியாளர்களுடன் சம நிலையை ஏற்படுத்துகிறது" என வரவேற்றுள்ள. ETH-Zurich-ன் KOF நிறுவனம், 2026-ல் சுவிஸ் வளர்ச்சி 1 சதவீதத்திற்கும் மேல் செல்லும் என கணித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், சுவிஸ்-அமெரிக்க வரகுதாக உறவுகளை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Switzerland US trade deal 2025, Swiss tariff cut to 15 percent, 200 Bn Dollars Swiss investment in US, Roche Novartis US investment plans, Swiss pharma tariff cap agreement, Switzerland equal footing with EU, Swiss exports tariff reduction deal, US Switzerland bilateral trade pact, Swiss industrial sector relief 2025, Switzerland US economic growth boost