மகளிர் பிக்பாஷில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி: பெர்த்தை நொறுக்கிய சிட்னி
WBBL போட்டியில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
கேட்டி மேக் 79 ஓட்டங்கள்
Drummoyne Oval மைதானத்தில் நடந்த போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின.
Half-century up for Katie Mack! 🌟 #WBBL11 pic.twitter.com/ShKtIsSxNj
— Weber Women's Big Bash League (@WBBL) November 19, 2025
கேப்டன் 69 பந்தில் 109 ரன் விளாசியும் வீண்! 33.3 ஓவர்களில் 252 ஓட்டங்கள்..நியூசிலாந்து மிரட்டல் வெற்றி
முதலில் ஆடிய பெர்த் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. கேட்டி மேக் 57 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் விளாசினார். 
பின்னர் களமிறங்கிய சிட்னி அணியில் ஜார்ஜியா வோல் அதிரடியாக 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
டாலியா, போபே அரைசதம்
அடுத்து கைகோர்த்த டாலியா வில்சன் மற்றும் போபே லிட்சிஃபீல்டு கூட்டணி அணியை வெற்றி பெற வைத்தது.
All the POTM moments from Tahlia Wilson’s brilliant innings 🌟 #WBBL11 pic.twitter.com/L9hTBpKqOI
— Weber Women's Big Bash League (@WBBL) November 19, 2025
சிட்னி அணி 18.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் அபார வெற்றி பெற்றது.
டாலியா வில்சன் (Tahlia Wilson) 55 (44) ஓட்டங்களும், போபே லிட்சிஃபீல்டு (Phoebe Litchfield) 50 (35) ஓட்டங்களும் விளாசினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |