சிரியாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 7 வீரர்கள் உயிரிழப்பு
சிரியாவில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.
இவ்வாறு செயல்படும் இந்த பயங்கரவாத குழுக்களால் பொதுமக்கள் மற்றும் அரசாங்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருந்தது தெரியவந்துள்ளது.
SANA handout via AFP
இதனால் இந்த குழுக்களை அடக்குவதற்காக சிரிய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டெய்ர் அல்-சூர் மாகாணத்தின் சிரிய ராணுவ அதிகாரிகள் முற்றுகையிட்டு இருந்தனர்.
இந்நிலையில் சிரிய ராணுவத்தின் முகாமை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், அத்துடன் இந்த தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |