உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை…சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து வீடியோ வெளியிட்ட சிறுவன்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவின் கட்டிட இடிபாடுகளில் இருந்து சிறுவன் ஒருவன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இடிபாடுகளில் சிக்கி பலியான உயிர்கள்
துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளையும் திங்கட்கிழமை 7.8 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் 24,596 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் மட்டும் மொத்தம் 3,553 உயிரிழந்து இருப்பதாகவும், அதில் 2,166 பேர் போராளிகளில் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
Getty image
அத்துடன் சிரியாவில் 5.3 மில்லியன் மக்கள் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் வீடியோ பதிவு
இந்நிலையில் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்டுள்ள சிறுவன் ஒருவன் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் நான் இந்த வீடியோவை படமாக்குகிறேன் என்று பேச தொடங்குகிற சிறுவன், “நான் உயிருடன் இருக்க போகிறேனா இல்லை உயிரிழக்க போகிறேனா என்று எனக்கு தெரியவில்லை, இந்த நிலையை உங்களால் பார்க்க முடியும்” என்று கூறுகிறான், மேலும் தன்னை சுற்றியுள்ள இடிபாடுகளையும் வீடியோ முலமாக காட்டுகிறான்.
This Syrian boy records himself from
— Subhan Jamil (@SubhanJamil17) February 8, 2023
under the rubble after his home collapsed
due to the earthquake.#TurkeySyriaEarthquake #Turkey #earthquakes #HelpTurkey #syriaearthquake #Turquia pic.twitter.com/42hodIXqOV
வீடியோவில் தொடர்ந்து பேசிய சிறுவன் எல்லாவற்றிக்கும் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறிக்கொண்டே, இந்த வீடியோ வெளியே வருகிறது என்றால் நான் அதை உயிருடன் வெளியேற்றி இருக்கிறேன் என்று பொருள், உங்களால் இந்த நிலைமை இதில் வாழ்ந்து பார்க்காத வரை உணர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் “ நான் நினைக்கிறேன் இதில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி இருப்பதாக நினைக்கிறேன், உங்களால் கேட்க முடிகிறதா? அது அண்டை வீட்டுக்காரர்களின் குரல்கள், அல்லாஹ் எங்களுக்கு உதவுவனாக” என்று உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் தெரிவிக்கிறான்.
மேலும் இந்த நிலநடுக்கத்தை எவ்வாறு விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை, அது திரும்பி வருகிறது, அது திரும்பி வருகிறது என்று சிறுவன் பதற்றத்துடன் கூறிய நிலையில் வீடியோ முடிவடைகிறது.