72 மணிநேர பொற்காலம்…துருக்கியில் பலி எண்ணிக்கை இரு மடங்காகும்: ஐ.நா தலைவர் தகவல்
துருக்கி சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என ஐ.நா-வின் உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
இறப்புகள் இருமடங்காகும்
கடந்த திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவை 7.8 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் மிகப்பெரிய பேரழிவு பதிவானது.
இதில் மொத்தம் இரு நாடுகளை சேர்ந்த 24,596 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நகரமான அடானாவில் ஸ்கையுடன் பேசிய ஐ.நாவின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ்(Martin Griffiths) துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
Turkey-Syria Earthquake Update: The total death toll across the two countries has surpassed 23,000. Thousands remain unaccounted for in the ravaged areas. Take a look at this aerial view of Antakya, Turkey:pic.twitter.com/SrxNcX4tM6
— Steve Hanke (@steve_hanke) February 10, 2023
அத்துடன் நாம் இன்னும் இடிபாடுகளுக்குள் செல்ல வேண்டி இருப்பதால் இறப்புகளின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிடுவது கடினம் என்று நான் நினைக்கிறேன், இதனால் இறப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் என்றும் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் மக்கள் இன்னும் சிக்கி கொண்டு உள்ளனர், அவர்களில் சிலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் மீட்பு பணி
இடிபாடுகளில் இருந்து மக்களை உயிருடன் மீட்பதற்கு 72 மணி நேரம் பொற்காலம் என்று மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறினார்.
Sky news
துருக்கி மற்றும் சிரியாவில் இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கான நம்பிக்கைகள் மங்கி வருவதால், மீட்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் சில மணி நேரம் முன்பு வரை மீட்பு படையினர் ஒருவரை உயிருடன் வெளியே இழுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.