குண்டு மழை பொழிந்த சொந்த நாட்டு படைகள்.. 6 குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பேர் படுகொலை!
சிரியாவில் அந்நாட்டு அரசாங்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஆதரவுடைய சிரிய அரசாங்கப் படைகள் idlib நகரில் நடத்திய ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக போர் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் தெற்கே உள்ள Jabal al-Zawiya பகுதியின் பல இடங்களில் 16 பேர் காயமடைந்தனர் என்று SOHR தெரிவித்துள்ளது.
Iblin கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், Balyun கிராமத்தில் 2 குழந்தைகளும், Balshun கிராமத்தில் மற்றொரு குழந்தையும் கொல்லப்பட்டன.
الصورة من جبل الزاوية عائلة كاملة فقد حياتها نتيجة استهداف منزلهم بالقذائف الروسية. pic.twitter.com/7syaLyNdxK
— IDLIB PLUS (@IdlibPlus) July 3, 2021
Iblin கிராமத்தில் இறந்த குடும்பத்தினரின் உடல்களை செவிலியர்கள் மற்றும் ஊர் மக்கள் அடக்கம் செய்தனர்.
சிரியாவில் போர் 2011-ல் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 5,00,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.