டி20 உலக கோப்பையின் லீக் போட்டிகள் நிறைவு…அரையிறுதிக்குள் நுழைந்த அணிகள் யாவை?
அரையிறுதிக்கு குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தேர்வு.
அரையிறுதிக்கு குரூப் 2ல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தேர்வு.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வரும் டி20 உலக கோப்பை போட்டியின் லீக் சுற்றுகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
2022ம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலக கோப்பை போட்டி கடந்த மாதம் அக்டோபர் 22ம் திகதி தொடங்கியது இதன் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
இந்த தொடரின் சூப்பர் 12 லீக் போட்டிகள் 16 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், லீக் போட்டியின் இறுதிப் போட்டிகள் நவம்பர் 6ம் திகதியான இன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையிலான போட்டியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் அரையிறுதிக்கு குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தேர்வாகியுள்ளன, குரூப் 2 பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தேர்வாகியுள்ளன.
முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பர் 9ம் திகதி வியாழக்கிழமை மோதுகின்றன.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வரும் நவம்பர் 10ம் திகதி வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணிகள் நவம்பர் 13ம் திகதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.