எங்கள் நாட்டின் மீது டஜன் கணக்கில் சீன ராணுவ பலூன்கள் பறக்கின்றன! அதிர்ச்சி கொடுத்த அதிகாரி
தைவானின் வான்வெளியில் சீன ராணுவ பலூன்கள் அடிக்கடி காணப்படுவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உளவு பலூன்
கடந்த 4ஆம் திகதி கனடா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள மொன்டானா மாகாண வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த வெள்ளை நிற ராட்சத பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அது சீன அனுப்பிய உளவு பலூன் என்று பென்டகன் கூறியது. ஆனால் அதனை மறுத்த சீனா, வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் வழி தவறி வந்துவிட்டதாக தெரிவித்தது.
@Reuters
அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம், யூகோன் பிராந்தியத்தின் வான்வெளியில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்ம பொருளை அமெரிக்க-கனடாவின் கூட்டுப்படைகளின் கீழ் இயங்கும் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.
CHAD FISH
தைவான் குற்றச்சாட்டு
இந்த நிலையில் சீனாவின் அண்டை நாடான தைவான் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. சீனாவின் ராணுவ பலூன்கள் சமீபத்திய ஆண்டுகளில் டஜன் கணக்கில் காணப்பட்டதாகவும், இது முன்பு அறியப்பட்டதை விட மிக அதிகம் என்றும் தைவானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
@U.S. FLEET FORCES/U.S. NAVY / VIA REUTERS
மேலும் அவர், 'அடிக்கடி அவர்கள் வருகிறார்கள், கடைசியாக சில வாரங்களுக்கு முன்பு' என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு அதிகாரியின் கூற்றுபடி, இதுபோன்ற ஊடுருவல்கள் சராசரியாக மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் என தெரிய வந்துள்ளது.
@Randall Hill/Reuters