சீன படையெடுப்பு உறுதி... கையேடு வழங்கி குடிமக்களைத் தயாராக வலியுறுத்திய நாடு
சீனாவின் படையெடுப்பு உறுதி என்ற நிலையில், மில்லியன் கணக்கான சிவில் பாதுகாப்பு கையேடுகளை வீடுகளுக்கு விநியோகிக்கத் தைவான் முடிவு செய்துள்ளது.
தைவான் சரணடையும்
தைவான் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக, குடிமக்களைத் தயார் படுத்த தைவான் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. சீனாவின் தாக்குதல் உட்பட அவசர நிலைகளை எதிர்கொள்ள குடிமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

தைவான் நிர்வாகம் இந்த வாரம் குடிமக்களுக்கு வழங்கவிருக்கும் கையேட்டில், எதிரி நாட்டு வீரர்களை எதிர்கொண்டால் என்ன செய்வது என்பது குறித்த வழிமுறைகளை முதன்முறையாக உள்ளடக்கியுள்ளது.
அத்துடன், தைவான் சரணடையும் என்ற கூற்றுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டான சூழலில், குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க பதுங்கு குழிகளை அடையாளம் கண்பது, அவசரகாலத்திற்கு என பொருட்களை தயார் செய்வது உள்ளிட்ட வழிகாட்டுதலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரிடர் மற்றும் சீன அச்சுறுத்தல் என இரண்டும் உள்ளடக்கியதாகவே புதிய கையேடு வழங்கப்பட உள்ளது. ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவான் மீது தனது இறையாண்மையை வலியுறுத்த சீனா இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையிலேயே தைவான் நிர்வாகம் மக்களைத் தயார் படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளது.
தைவான் முழுவதும் 9.8 மில்லியனுக்கும் அதிகமான அஞ்சல் பெட்டிகளில் கையேடு விநியோகம் இந்த வாரம் தொடங்கும். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் கையேடு அச்சிடப்பட்டுள்ளது.

கலக்கமடையாமல்
கையேடு விநியோகம் முழுமையாக முடிவடைந்ததும், விளம்பரங்கள் ஊடாக மக்கள் தங்கள் தனிப்பட்ட அவசரகால தயாரெடுப்புகளை முன்னெடுக்க அரசாங்கம் உதவ இருக்கிறது.
கடலுக்கடியில் கேபிள்களைத் துண்டித்தல், சைபர் தாக்குதல்கள் முதல் மோதலுக்கு முன்னோடியாக எதிரி நாடாக கருதி தைவான் கப்பல்களை ஆய்வு செய்வது வரை தைவான் எதிர்கொள்ளக்கூடும் என்றே கூறுகின்றனர்.

படையெடுப்பு ஏற்பட்டால், பொதுமக்கள் கலக்கமடையாமல், தேவையானப் பொருட்களை சேமித்து உறுதிப்படுத்தவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அடைக்கலம் தேடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மட்டுமின்றி, இனி சீனாவின் பிரபலமான செயலிகள் WeChat மற்றும் TikTok உட்பட பலவற்றையும் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர். தைவான் மக்கள் சீன தயாரிப்பு வீட்டு உபயோகப்பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |