நெருக்கும் சீனா... தைவானுக்கு பேரிடியாக வெளியான சம்பவம்
தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தகவலை உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகம் உறுதி செய்துள்ளது. சனிக்கிழமை பகல் ஹொட்டல் அறை ஒன்றில் Ou Yang Li-hsing மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது இறப்பிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தரப்பு விசாரணை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைவானின் தென் பகுதியில் அமைந்துள்ள Pingtung நகருக்கு தொழில்முறை பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு ஏவுகணை தயாரிப்பு திட்டங்களை மேற்பார்வையிடும் பொறுப்பை Ou Yang Li-hsing ஏற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
சீனாவின் அதிகரிக்கும் இராணுவ நெருக்கடிக்கு மத்தியில் ஏவுகணை உற்பத்தி திறனை 500 எண்ணிக்கையில் அதிகரிக்க வேண்டும் என்ற முடிவுடன் Ou Yang Li-hsing தலைமையிலான குழு செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்து சென்றுள்ள நிலையில் சீனா கடும் நெருக்கடி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.