தாம்பத்திய உறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி: கணவர் எடுத்த அதிரடி முடிவு
தைவானில் மனைவி ஒருவர் தாம்பத்திய உறவுக்கு மற்றும் உரையாடலுக்கு கட்டணம் வசூலித்த நிலையில் வேதனையில் கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கணவர் குண்டானதால் விலகிய மனைவி
தைவானில் வசித்து வரும் ஹாவ்(Hao) என்பவருக்கும் சுவான்(Xuan) என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
கிட்டத்தட்ட 3 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு மனைவி சுவான் கணவர் ஹாவ் உடல் பருமன் அதிகரித்ததை காரணம் காட்டி அவருடனான தாம்பத்திய உறவு மற்றும் உரையாடலை தவிர்க்க தொடங்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த கணவர் ஹாவ், 2021ம் ஆண்டு திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதற்காக விவாகரத்து செய்ய முன்வந்துள்ளார்.
ஆனால், உறவை மேம்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்து ஹாவ் உடனான திருமண வாழ்க்கையை சுவான் தொடர்ந்துள்ளார்.
இதன் பிறகு சுவான் பெயரில் சொத்துக்களை கூட ஹாவ் எழுதி வைத்துள்ளார்.
மோசமான நிலைமை
இந்நிலையில், நிலைமை மிகவும் மோசமடையும் விதமாக கணவர் ஹாவ்விடம் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு மற்றும் உரையாடல் நடத்துவதற்கு கண்டனமாக NT$500 (தோராயமாக ரூ. 1200) வசூலிக்க தொடங்கியுள்ளார்.
இதனால் மனமுடைந்த கணவர் ஹாவ் இந்த ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இறுதியில் ஹாவ்-வுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, தம்பதிகள் கடந்த 2 ஆண்டுகளாக நேருக்கு நேர் பேசிக் கொள்ளவில்லை என்றும், சமூக ஊடகத்தின் வழியாக மட்டுமே உரையாடிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |