தைவான் மீதான படையெடுப்பு... கொரோனாவை விடவும் உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை கொடுக்கும்: எச்சரிக்கும் நிபுணர்கள்
தைவான் மீது சீனா படையெடுக்கும் என்றால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டதன் பல மடங்கு இந்த போரினால் ஏற்படும்
தைவான் மீது சீனா படையெடுக்க முடிவு செய்தால் அது கொரோனா பெருந்தொற்றைவிடவும் பல மடங்கு பேரிழப்பை உலக நாடுகளுக்கு அளிக்கும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனா சமீப மாதங்களாக தைவானை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதுடன், தங்கள் நிலப்பரப்பின் ஒரு அங்கமாகவே தைவானை கருதி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
@atockwars
மேலும், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் செல்வதை கடுமையாக எதிர்த்த சீனா, அவரது பயணத்திற்கு பின்னர் தைவானை அச்சுறுத்தும் வகையில் ஒருவாரம் நீண்ட போர் ஒத்திகையை முன்னெடுத்தது.
இந்த நிலையில், தைவான் மீது சீனா படையெடுக்கும் என்றால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டதன் பல மடங்கு இந்த போரினால் ஏற்படும் எனவும், உலக நாடுகள் பல டிரில்லியன் டொலர் இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவானின் முந்தைய தலைநகரான தைனான், அதனைச் சுற்றியுள்ள வளமான வயல்வெளிகள் அங்கு காணப்படும் மின்மினிப் பூச்சிகள், உணவு மற்றும் நூற்றுக்கணக்கான வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றதாகும்.
ஆனால் அதன் வடக்கே பிரமாண்டமான தொழிற்புரட்சியை காண முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். தைவான் தற்போது அதிநவீன கணினி சிப்புகள் தயாரிப்பில் உலகின் பிற பகுதிகளை விஞ்சியுள்ளது.
@hamara
சீனாவையும் அமெரிக்காவையும் விஞ்சும் தைவானின் அந்த ஆதிக்கம், சீனாவை கலக்கமடைய செய்திருக்கலாம் எனவும், சீனா எப்போதாவது தைவானைக் கைப்பற்றும் அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால், பேரழிவு தரும் உலகளாவிய தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்ற அச்சம் நிபுணர்கள் தரப்பில் எழுந்துள்ளது.
மட்டுமின்றி, சீனாவிற்கும் தைவானுக்கும் இடையிலான மோதலின் பாதிப்பானது உலகிற்கு டிரில்லியன் கணக்கில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒரு சாதாரண மொபைல் ஃபோனில் 22 சிப்புகள் உள்ளன, அதே சமயம் ஒரு சிறிய நீரிழிவு மானிட்டரில் கூட நான்கு மற்றும் ஒரு சமையலறை காபி மேக்கரில் மூன்று சிப்புகள் உள்ளது.
இதனாலையே தைவானின் தேவை உலக நாடுகளுக்கு சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தைவானின் 125 பில்லியன் டொலர் சிப் பொருளாதாரமே சீனாவை படையெடுப்புக்கு தூண்டியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.