பிறக்கப்போகும் குழந்தையின் Gender Reveal செய்த இர்ஃபான்! பாய்ந்தது தமிழக அரசின் நடவடிக்கை
யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது தமிழக மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Gender Reveal
பிரபல யூடியூபர் இர்ஃபான், திருமணம் செய்து கொண்டு பல்வேறு வீடியோக்களை மனைவியுடன் இணைந்து வெளியிடுவார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
இவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்க பார்ட்டி வைத்துள்ளார்.
அப்போது, ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை அறிவித்தார்.
இவர், தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றிருந்த நிலையில் அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொன்டு குழந்தையின் பாலினத்தை அறிவித்துள்ளார்.
தமிழக மருத்துவத்துறையின் நடவடிக்கை
இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.
13 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 வயது மகள்! AI மூலம் 14 வயது புகைப்படத்தை பகிர்ந்து தேடும் பாசப் போராட்டம்
மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் தமிழக சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |