காபூலில் ஜீன்ஸ் அணிந்து சென்றவருக்கு நேர்ந்த கதி... பொதுவெளியில் வைத்து தலிபான்கள் அளித்த தண்டனை! கமெராவில் சிக்கிய காட்சி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்ற மாணவரை பொதுவெளியில் வைத்து தலிபான்கள் தண்டித்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாபதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
ஆப்கானை கைப்பற்றிய தாலிபன்கள் ஷரியா சட்டத்தை அமல்ப்படுத்த போவதாக அறிவித்திருப்பது அந்நாட்டு மக்களை குறிப்பாக பெண்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
நாட்டை கைப்பற்றிய உடனே தொலைக்காட்சியில் பணியாற்றி பெண்களை பணியில் இருந்து நீக்கியும், காபூலில் செய்தி சேகரிக்கும் வெளிநாட்டு பெண் ஊடகவியலாளர்கள் முகத்தை மூடிய படி புர்கா அணிய வேண்டும் எனவும் தலிபான்கள் சட்டங்களை கடுமையாக்கினர்.
இனி ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், காபூலில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்ற மாணவனை பிடித்த தலிபான்கள், பொது இடத்தில் வைத்து வற்புறுத்தி மாணவனை சாக்கடைக்குள் இறக்கி தண்டித்துள்ளனர்.
சம்பவயிடத்தில் இருந்த நபர் ஒருவர் குறித்த காட்சியை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.