ஆப்கானில் பெண்கள் உரிமை குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர்... அதற்கு தலிபான்கள் அளித்த வித்தியாசமான பதில்! வைரலாகும் வீடியோ
ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை குறித்த உலகளாவிய கவலையின் மத்தியில், பெண் பத்திரிகையாளருக்கும் தலிபான் போராளிகளுக்கும் இடையிலான உரையாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சரிந்தது, காபூல் மற்றும் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய தலிபான் நாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமை குறித்து உலகளாவிய கவலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பெண் பத்திரிகையாளருக்கும் தலிபான் போராளிகளுக்கும் இடையிலான உரையாடல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், பெண் பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தின் கீழ் பெண்களின் உரிமைகள் பற்றி போராளிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போராளி, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் பெண்களுக்கான உரிமை இருக்கும் என கூறினார்.
The laughter says it all #Taliban pic.twitter.com/zznkH2YRrl
— Manak Gupta (@manakgupta) August 18, 2021
தலிபான்கள் ஜனநாயக ஆட்சியை ஏற்றுக்கொள்வார்களா மற்றும் பெண் அரசியல்வாதிகளில் மக்கள் வாக்களிக்க அனுமதிப்பார்களா என்று பத்திரிகையாளர் போராளிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை கேட்ட சிரித்த போராளிகள், கமெரா மூலம் படம் பிடிப்பதை நிறுத்துமாறு கூறினர்.
அவர்களின் சிரிப்பே ஆப்கானில் பெண்களின் நிலை என்ன என்பதை தெளிவுப்படுத்துவதாக பலர் கவலை தெரிவித்துள்ளனர்.