ஆப்கானில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மக்களிடம் மதகுருக்கள் இதை வலியுறுத்த வேண்டும்! தாலிபான்கள் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மதகுருக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்து சொல்லுமாறு தாலிபான்களால் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
காபூல் விமானநிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில் மேலே கூறப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையில் தொடர்ந்து அவர்களின் செயல்கள் அதிர்ச்சியளிப்பதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதையடுத்து தங்கள் மீதான எதிர்மறை கருத்துக்களை போக்க இஸ்லாமிய மதகுருக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்து சொல்லுமாறு தாலிபான்கள் அவர்களை வலியுறுத்தியுள்ளனர்.
இதோடு இமாம்கள் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க எங்கள் நாட்டவர்களை ஊக்குவிக்க வேண்டும், நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கக்கூடாது என அவர்களிடம் தொடர்ந்து கூற வேண்டும் என அவர்களிடம் தாலிபான்கள் தெரிவித்திருக்கின்றனர்.