திறமைசாலிகளை வெளியேற்ற கூடாது! அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தாலிபான்
ஆப்கானிஸ்தானை விட்டு மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற திறமையானவர்களை அமெரிக்க படை வெளியேற்ற கூடாது என்று தாலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புதிய அரசை நிறுவ மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் மக்கள் உயிருக்கு பயந்து அமெரிக்க படையின் உதவியோடு நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க படை அனைத்தும் ஆப்கானிஸ்தானை விட்டு 31ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று 2வது முறையாக செய்தியாளர்களை சந்தித்த தாலிபான்கள் கூறியதாவது, ஆப்கான் மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது கவலை அளிப்பதாக கூறினார்.
மேலும் ஆப்கனில் படித்த மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற திறமைசாலிகளை வெளியேற்ற கூடாது என்று அமெரிக்க ராணுவ படைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் பெண்களும் அரசாங்க வேலைகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என உறுதியளிப்பதாகவும், காபூல் விமானநிலையத்தில் காத்திருக்கும் மக்கள் வீடு திரும்ப வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.