செல்போனில் பாட்டு கேட்ட இளைஞர்., துப்பாக்கி முனையால் தாக்கிய தாலிபான்! பரபரப்பு வீடியோ
காபூலில் உள்ள ஒரு கடைத் தெருவில், தனது மொபைல் போனில் பாட்டு கேட்டு நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை, தாலிபான் பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கி நுனியால் தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத்த தொடர்ந்து, அந்நாட்டில் மக்களை ஒடுக்கும் பல கடுமையான கட்டுப்பாடுகளை வித்தித்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு, அங்கு என ஆணும் தாடியை ஷேவ் செய்தால் பரபட்சம் இன்றி சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும்.
பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகள் விமான நிலையத்தில் இருக்கும்போது, தாலிபான்கள் நிறைய சட்டங்களை அமுல்படுத்தவில்லை, ஆனால் சர்வதேச படைகள் வெளியேறிவரும்போது ஒவ்வொரு தனி நபருக்கும் பொருந்தும் பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தலைநகர் காபூலில் உள்ள ஒரு கடைத் தெருவில், தனது மொபைல் போனில் பாட்டு கேட்டு நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை, தாலிபான் பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கி நுனியால் நெஞ்சிலேயே குத்தியுள்ளார்.
மேலும், நெத்திப்பொட்டில் துப்பாக்கியை வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். பிறகு மற்றோரு தாலிபான் அந்த இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைக்கிறார்.
இதனை அங்கிருந்த பிரித்தானியர் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து, செய்து நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டு வைரலாகிவருகிறது.