காபூலில் சோதனைச் சாவடிகளை அமைத்து தாலிபன்கள் செய்யும் அட்டூழியம்! வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பங்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பல பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ள தாலிபன்கள், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வருபவர்களை மடக்கி சரமாரியாக தாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபத அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே, ஆப்கனில் இசைக்கு தடை, பெண்கள் மூன்று நாட்களுக்கு மேல் பயணம் மேற்கொண்டால் பாதுகாவலர் துணையுடன் இருக்க வேண்டும் என புதிய விதிகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காபூலில் பல பகுதிகளில் குறிப்பாக Dehburi-யில் சோதனை சாவடிகளை அமைத்துள்ள தாலிபானை சேர்ந்த துப்பாக்கிதாரிகள், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வருபவர்களை நிறுத்தி, அவர்களின் மொபைல் போன்களை சோதனை செய்கின்றனர்.
போனில் ஏதேனும் இசை இருந்தால், அவர்களை தாலிபன்கள் சரமாரியாக தாக்குவதாக உள்ளூர்வாசி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.