ஆப்கானிஸ்தானில் வெட்ட வெளியில் பெண்களுக்கு நடந்த கொடூரம்... வெளிவரும் தலிபான்களின் மிருகத்தனம்! சிக்கிய வீடியோ
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலிபான் போராளி ஒருவர் மிருகத்தனமாக அடித்து விரட்டியடிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நாள் முதல், தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க கோரி நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவரை நிறுத்த வேண்டும் என காபூலில் ஆப்கானியர்கள் குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்கு காபூலில் பேரணியாக சென்ற பெண்களை தலிபான் போராளி ஒருவர் பிரம்பால் சரமாரியாக அடித்து விரட்டியடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆப்கானில் பெண்களுக்கான உரிமை மற்றும் சுதந்திரம் கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
குறித்து வீடியோவில், வாசகங்கள் எழுதிய சிறிய அட்டைகளை கையில் ஏந்தியவாறு, முழக்கமிட்டபடி பெண்கள் சாலையில் பேரணியாக செல்கின்றனர்.
இதன்போது, தலிபான் போராளி ஒருவர் பிரம்பால் பெண்களை மிருகத்தனமாக தாக்குகிறார்.
Taliban brutally beating girls, who were protesting in west Kabul. pic.twitter.com/zMbd5GP1LY
— Shabnam Nasimi (@NasimiShabnam) September 8, 2021
இதைக்கண்ட மற்ற பெண்கள் அங்கிருந்து தெறித்து ஓடுகின்றனர்.
நாங்கள் மாறிவிட்டோம், ஷரியா சட்டப்படி பெண்களுக்கான உரிமை வழங்கப்படும் என அறிவித்த தலிபான், தற்போது அவர்களின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் தெரிவித்துள்ளனர்.