தாலிபான்களுக்கு அஞ்சி ஐந்து வாலிப மகள்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் தாய்: தப்புவார்களா?
தாலிபான்கள் பிடித்து பாலியல் அடிமைகளாக்கிக்கொள்ளலாம் என்று அஞ்சி, தன் ஐந்து வாலிபப் பெண்களையும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார் ஒரு தாய்.
அவர்கள் Hazara என்ற இனத்தைச் சார்ந்தவர்கள். பளிச்சென்ற நிறமும் அழகும் உடைய அந்த பெண்களை பார்த்த உடனேயே அவர்கள் Hazara இனத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டுபிடித்துவிடலாமாம்.
பொதுவாகவே Hazara இனத்தவர்களை மற்ற இனத்தவர்கள் துன்புறுத்துவதுண்டாம். இப்போது ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர்களால் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்துகொண்டு தன் மகள்களை அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுவிடுமாறு கூறி காபூல் விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் அவர்களது பெற்றோர்கள்.
ஏற்கனவே அவர்கள் இருந்த வீட்டை தாலிபான்கள் தீவைத்து கொளுத்திவிட்டனராம்.
இதற்கிடையில், வீடு வீடாகச் சென்று திருமணமாகாத பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்துக்கொண்டு போக வேறு தொடங்கியிருக்கிறார்கள் தாலிபான்கள்.
ஆகவே, இனி ஆப்கானிஸ்தானிலிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று எண்ணி, எப்படியாவது அமெரிக்காவுக்குச் சென்று விடுங்கள் என்று கூறி, தன் மகள்களான Aaina Sheikh (19), Hafizah (23), இரட்டையர்களான Hawa மற்றும் Latifa (20), மற்றும் Marjaan (18) ஆகியோரை, தங்கள் மகன் Nader (25) உடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள் அவர்களது பெற்றோர்.
காபூல் விமான நிலையத்தில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் பிள்ளைகள் பத்திரமாக தப்புவார்களா? தெரியாது!