ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபான்கள்..ஹெய்டியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதிபர் பதவியில் இருந்து அஷ்ரப் கனி விலகினார்.
ஆப்கானிஸ்தானில் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த தாலிபான்கள் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து ஹிராத், காந்தகார், மசார் இ சரீப் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினர். இன்று காலை ஜலாலாபாத் நகரையும் கைப்பற்றி அங்கு வெள்ளைக் கொடிகளை ஏற்றினர்.
அதுமட்டுமின்றி துருக்கியில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஹெய்டியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,297 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.