தாலிபான்களை கேலி செய்து வீடியோக்கள் வெளியிடும் பிரபல காமெடியனுக்கு நேர்ந்துள்ள கதி
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும், இனி பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இருக்காது என்றார்கள்.
ஆனால், அவர்கள் செய்து வரும் செயல்கள் அனைத்து தரப்பினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.
தாலிபான்களை கேலி செய்து பாடல்கள் பாடும் மற்றும் ஜோக் அடிக்கும் ஒரு பிரபல காமெடியனைக் கூட அவர்கள் சகித்துக்கொள்ள இயலாமல் கொலை செய்துள்ளார்கள்.
Khasha Zwan என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்ட Nazar Mohammad, ஒரு நகைச்சுவையாளர். தன்னைச் சுற்றி நடக்கும் விடயங்களை பாடல்களாகவும் நகைச்சுவையாகவும் மாற்றி வீடியோக்கள் வெளியிடுவதுண்டாம் அவர். அப்படி அவர் கேலி செய்தவர்களில் தாலிபான்களும் தப்பவில்லை. அவரை சமூக ஊடகங்களில் பின்தொடர்வோர் ஏராளம்.
அப்படிப்பட்ட அந்த நகைச்சுவையாளரின் நகைச்சுவையைக் கூட, சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாமல் அவரை பிடித்து கொலை செய்துள்ளனர் தாலிபான்கள். Nazarஐ அவரது வீட்டிலிருந்து தாலிபான்கள் பிடித்துக்கொண்டு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அவ்வளவுதான், எல்லாம் முடிந்தது என்று அறிந்தும், தாலிபான்களுடன் ஜீப்பில் பயணிக்கும்போதும் அவர்களை கேலி செய்து ஜோக்கடித்துக்கொண்டே பயணித்துள்ளார் Nazar.
ஆனால், அவரது ஜோக்கைக் கேட்டு தாலிபான்களில் ஒருவன் Nazarஐ கன்னத்தில் அறைவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
பிறகு ஓரிடத்தில் Nazarஇன் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல முறை துப்பாக்கியால் சுடப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் கொல்லப்பட்டுக் கிடந்துள்ளார் அவர்.
Nazar ஒரு முன்னாள் பொலிசார். அவர் தாலிபான்களை சித்திரவதை செய்து கொன்றவர். அதனால்தால் அவரைக் கொன்றோம் என்று தாலிபான்கள் கூறியுள்ளார்கள். பிறகு Nazarஇன் குடும்பம் அவரது உடலை எடுத்து முறைப்படி அடக்கம் செய்துள்ளது.
Nazarஇன் மரணத்துக்கு நோபல் பரிசு பெற்ற மலாலாவின் தந்தை உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
நாங்கள் மாறிவிட்டோம், இனி பழிவாங்கமாட்டோம், சம உரிமை கொடுப்போம் என்று பேட்டி எல்லாம் கொடுத்தாலும், இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தாலிபான்களின் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடரும் என்றே தோன்றுகிறது.