விமானநிலையத்தை சுற்றியும் தாலிபான்கள் செய்த செயல்! தப்பிக்க முடியாமல் திணறும் மக்கள்: பரிதாப வீடியோ காட்சிகள்
காபூல் நகரில் இருக்கும் விமானநிலையத்திலும் தாலிபான்கள் வந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதால், மக்கள் அலறி அடித்து ஓடினர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கிருக்கும் ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக காபூர்ல் நகரில் இருக்கும் விமானநிலையத்திற்கு தினந்தோறும் மக்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றனர்.
ஏனெனில், தங்கள் நாட்டு மக்களை அழைத்து வருவதற்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இராணுவ சரக்கு விமானத்தை அனுப்புவதால், அதில் ஏறி ஏராளமான ஆப்கான் மக்கள் கத்தாரில் இறக்கிவிடப்படுகின்றனர்.
ஆனால், தற்போது விமானநிலையத்தை எக்கு வளையத்தால் மூடியுள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான மகக்ள் விமானநிலையத்தின் உள்ளே செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனால் காபூலில் இருந்து புறப்பட்ட விமானங்கள் கிட்டத்தட்ட காலியாகவே திரும்பியுள்ளன. குறிப்பாக அவுஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்ட Hercules C-130 விமானத்தில் 120 பேர் பயணிக்கலாம்,
ஆனால் அதில் வெறும் 26 பேர் மட்டுமே சென்றுள்ளனர்,. இதை அவுஸ்திரேலியா அரசாங்கமும் உறுதிபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் 150 பேருடன் செல்லக் கூடிய German Airbus A-400M நேற்று புறப்பட்டபோது வெறும் ஏழு பேரை மட்டுமே ஏற்றிச் சென்றது.
காபூல் விமானநிலையத்தில் இன்னும் நம்பிக்கையுடன் ஏராளமான மக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விமான நிலையத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோரிடம் பயண ஆவணங்கள் இல்லை.
பெரும்பாலான தூதரகங்கள் மூடப்பட்டு அல்லது விமான நிலையத்தின் எல்லைக்குள் நகர்த்தப்பட்ட நிலையில், இப்போது அவற்றைப் பெற வழியில்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
மேலும், விமானநிலையத்திற்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்த போது, அங்கு வந்த தாலிபான்கள் சிலர் கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பீதியடைந்த மக்கள் அங்கும், இங்கும் அலறிய ஓடிய வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.