எங்கள் நாட்டில் இதை செய்ய நீங்கள் யார்? அமெரிக்காவை விளாசிய தாலிபன்
காபூலில் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலை தலிபான் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid கண்டித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காபூலில் நடத்திய தாக்குதலில் இரண்டு ஐ.எஸ் தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்ததாகவும் பென்டகனின் மேஜர் ஜெனரல் வில்லியம் டெய்லர் சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
காபூலில் அமெரிக்க நடத்திய தாக்குதலில் 2 வயது குழந்தை உட்பட பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, காபூலில் அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலை தலிபான் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid கண்டித்துள்ளார்.
இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம், ஏனென்றால் மற்ற நாடுகளில் தன்னிச்சையான தாக்குதல்களை நடத்துவது சட்டவிரோதமானது.
ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், முதலில் எங்களுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும், பொதுமக்களின் உயிரிழப்பை ஏற்படுத்திய தன்னிச்சையான தாக்குதல் அல்ல என்று Zabihullah Mujahid கண்டித்துள்ளார்.