அமெரிக்கா விட்டு சென்ற இராணுவ வாகனங்களை தாலிபான்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச் சென்ற இராணுவ உபகரணங்களை தாலிபான்கள் என்ன செய்யவுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய போதும், கடந்த 31-ஆம் திகதி வரை அமெரிக்க படை வெளியேற அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்த வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்படோர் வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து தற்போது அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிட்டதால், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
படைகள் அனைத்தையும் விலக்கி கொண்ட அமெரிக்கா இராணுவம், ஏராளமான விமானங்கள், ஆயுதங்கள், நவீன கருவிகளை நாட்டின் முக்கிய நகரங்களான காபூல், கந்தஹார் உள்ளிட்ட இடங்களில் விட்டு சென்றுள்ளது.
இந்நிலையில் கந்தஹாரில் அமெரிக்கா விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான ANA -ஹம்வீ வகை இராணுவ வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றிய இந்த, இராணுவ வாகனங்களை கொண்டு கந்தஹாரில் தாலிபான்கள் அணிவகுப்பு ஒன்றியும் நடத்தி உள்ளனர்.
மேலும், காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமான போக்குவரத்தை சீரமைக்க தாலிபான்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக கத்தார் அரசின் உதவியை அவர்கள் நாடி உள்ளனர். தாலிபான்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கத்தார் அரசு, விமான போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்ப குழு ஒன்றை தனி விமானம் மூலம் காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.