ஆட்சியை கைப்பற்றியதும் மிகப்பெரிய சம்பவம் செய்த தாலிபான்: வெளிவரும் பகீர் பின்னணி
ஆப்கானிஸ்தானின் ஐ.எஸ் தலைவரும் முன்னாள் தெற்கு ஆசியாவுக்கான முக்கிய பொறுப்பாளருமான உமர் கோராசனி என்பவரை தாலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோரசனி, ஆப்கானிஸ்தானில் உள்ள புலெ சர்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இங்கிருந்து கடத்திச் சென்ற தாலிபான்கள் படுகொலை செய்துள்ளனர்.
2020ல் ஆப்கான் பாதுகாப்புப்படையினரால் கோராசனி கைது செய்யப்பட்டார். 2015 தொடங்கி ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பை பலப்படுத்த அதன் நிர்வாகிகள் முயன்று வருகின்றனர்.
இதனையடுத்து ஐ.எஸ் அமைப்பினர் மீது தாலிபான்கள் பகையுடன் இருந்து வந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் மாதம் தாலிபான்களுக்காக நிதி திரட்டிய சில வியாபாரிகளை ஐ.எஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இதனையடுத்து தாலிபான்கள் முன்னெடுத்த தாக்குதலில் 20 பேர்கள் கொல்லப்பட்டனர். மட்டுமின்றி ஐ.எஸ் அமைப்பினர் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்தனர் தாலிபான்கள்.
ஐ.எஸ் மற்றும் தாலிபான்களுக்கு இடையேயான மோதல் போக்கால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றும் முன்னர் சுமார் 2,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானின் இருப்பதாக கூறப்பட்டது.
தாலிபான்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து வந்தாலும், இந்த மோதல் போக்கு நிரந்தரம் இல்லை என்றே நிபுணர்கள் தரப்பு கூறுகின்றது.