சீனா தான் எங்களின் முக்கிய கூட்டாளி! தாலிபான்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சீனாவுடன் இருக்கும் உறவை குறித்து முதல் முறையாக தாலிபான்கள் வெளிப்படையாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதோடு புதிய அரசை அமைக்கும் பணியில் தாலிபான்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் அவர்கள் அமைக்கப்போகும் அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க படை ஆப்கானை விட்டு வெளியேறிய நிலையில் தாலிபான் அரசுக்கு சீனா ஆதரவு அளித்துள்ளது. அந்த வகையில் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஜித் சீனா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, சீனா தங்களது நெருக்கமான கூட்டாளி என்று முதல் முறையாக சீனாவுடனான உறவை வெளிப்படுத்தியுள்ளனர். சீனாவின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள வளமான சுரங்கங்களை மீண்டும் செயல்பட வைக்க முடியும்.
மேலும் தங்களது சுரங்கத்தில் தயாரான பொருள்களை உலகம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு சீனாவின் மூலமாக எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சீனாவை போல ரஷ்யாவுடனும் சிறந்த உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சீனாவின் ஒன் பெல்ட், ஒன் ரோடு திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.