காபூல் ஜனாதிபதி மாளிகையில் நுழைந்த பின் தாலிபான்கள் செய்த செயல் ! கமெராவில் பதிவான காட்சி
ஆப்கானிஸ்தான் தலைநகர் ஜனாதிபதி மாளிகையில் தாலிபான்கள் சொகுசாக அமரிந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அமெரிக்க படைகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஒவ்வொரு பகுதிகளையும் கைப்பற்றி வந்த தாலிபான்கள், நேற்று நாட்டின் முக்கிய தலைநகரான காபூல் நகரையும் கைப்பற்றினர்.
இதையடுத்து நாட்டின் ஜனாதிபதி Ashraf Ghani நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால், அவர் தற்போது வரை எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
இன்னும் சில நாட்களில் முழு அதிகாரமும் தாலிபான்கள் கையில் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
#WATCH : #Taliban Fighters at the Presidential Palace, #Kabul . #Afghanistan #KabulHasFallen #KabulFalls #TheNewsInsight pic.twitter.com/KlgA42IMin
— The News Insight (@TNITweet) August 16, 2021
இந்நிலையில், காபூல் நகரில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த தாலிபான்கல் அங்கிருக்கு சொகுசு சோபாக்களில் அமர்ந்து விருந்து சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் தாலிபான்கள் நாட்டை ஆக்கிரமித்துவிட்டதால், அங்கிருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமானநிலையத்தில் கூடி வருவதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.