அமெரிக்காவை அசிங்கப்படுத்திய தாலிபான்கள்? கம்பீரமாக கொடியை நாட்டும் புகைப்படம்
அமெரிக்காவை கேலி செய்யும் வகையில் தாலிபான்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் அங்கு தங்கள் கொடூர முகத்தை காட்ட துவங்கிவிட்டனர். இதன் காரணமாக அங்கிருக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் கடும் அச்சத்துடனே வாழ்த்து வருகின்றனர்.
அல்கொய்தா அமைப்பிற்கு இடம் கொடுக்கமட்டோம் என்று கூறிய தாலிபான்கள், நேற்று அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் மிகப் பெரும் பயங்கரவாதியான Khalil Haqqani-ஐ அனுமதித்துள்ளனர்.
அது தொடர்பான வீடியோ வெளியாகியிருந்தது.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் இராணுவ உடமைகளை கைப்பற்றிய தாலிபான்கள், அமெரிக்கா இராணுவத்தின் உடை, இராணுவ ஹெல்மட், இராணுவ துப்பாக்கி என கெத்தாக ஆப்கான் பகுதியில் சுற்றி வருகின்றனர்.
Meet the new Taliban teams, American car, American weapons, American costume. pic.twitter.com/34rpGbMuQo
— Asaad Hanna (@AsaadHannaa) August 21, 2021
இந்நிலையில், தற்போது அமெரிக்காவை அவமானப்படுத்தும் வகையில் தாலிபான்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த புகைப்படம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
அதில், கடந்த 1945-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கிடையே நடந்த சண்டையில் அமெரிக்கா Iwo Jima-வைக் கைப்பற்றியது. அதை அடையாளப்படுத்தும் விதமாக அமெரிக்க இராணுவ வீரர்கள் சிலர் அமெரிக்க கொடியை அங்கு நிலை நாட்டிருப்பார்.
அதை தற்போது தாலிபான்கள் கிண்டல் செய்துள்ளனர். அந்த புகைப்படத்துடன், இப்போது தாலிபான்கள் இராணுவ உடை, துப்பாக்கி என ஒரே மாதிரி கெட்டப்பில் இருப்பதுடன், கையில் மட்டும் தாலிபான்கள் கொடி இருப்பது போன்று, வெளியிட்டுள்ளனர்.
இந்த இரண்டு புகைப்படமும் இப்போது ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இது அமெரிக்க அதிகாரிகள் பலருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் வெளியாகி வெகு நேரம் ஆகியும் இதுவரை தாலிபான்கள் இது குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.