'சமையல் நல்லா இல்லை' பெண்ணை உயிருடன் தீ வைத்து எரித்த தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் மோசமாக சமையல் செய்ததாக்க கூறி ஒரு பெண்ணை தாலிபான்கள் உயிருடன் தீ வைத்து எரித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர பிரச்சாரம் செய்யும் Every Woman Treaty எனும் உடன்படிக்கையின் உலகளாவிய திட்டங்களின் தலைவரும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் நீதிபதியுமான நஜ்லா அயூபி (Najla Ayoubi), ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தீவிர வன்முறை பற்றி கூறியதாக கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வியாழக்கிழமை கட்டாயப்படுத்தப்பட்டு செய்த சமையல் மோசமாக இந்ததாக ஒரு பெண்ணை தாலிபான்கள் உயிருடன் தீ வைத்து எரித்ததாக கூறினார்.
மேலும், இளம் பெண்கள் தாலிபான் பயங்கரவாதிகளை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும்,சில பெண்கள் உயிருடன் சவப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள், அதனால் அவர்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படலாம் என்று நஜ்லா அயூபி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோன்ற குற்றச்சட்டுகள், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய அடுத்த 5 நாட்களுக்கும் நடத்தவை என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தாலிபான்கள் தெருக்களில் மக்களை அடித்து தேசியக் கொடிகளை பறிமுதல் செய்வதை வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
மேலும், தாலிபான்கள் வீடு வீடாகச் சென்று சிறுபான்மை இனத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.