ஆப்கானில் களைகட்டும் புதிய ஆட்சி.. தெருக்களில் கொடிகளை ஏற்றி தாலிபான்கள் அட்டகாசம்! வைரலாகும் புகைப்படம்
ஆப்கானில் புதிய ஆட்சி அமைவது குறித்து நகரம் முழுவதும் கொடிமற்றும் பேனர்களை நிறுவி தாலிபான்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானை பாதுகாத்து வந்த அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளனர்.
இதனால் ஆப்கானிஸ்தானில் கூடிய விரைவில் புதிய அரசாங்கம் தொடங்கயுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தாலிபான்கள் மும்முரமாக செய்து வருகின்றனர். ஆப்கானை விட்டு அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து தாலிபான்கள் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிவிட்டனர்.
அவரக்ளின் புதிய ஆட்சி குறித்து தாலிபான்கள் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசாங்கத்தில் தாலிபானின் இணை நிறுவனர் அப்துல் கனி பராதர் தாலிபான் அரசின் தலைவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
தலிபான்களின் உச்சபட்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஆப்கானின் தலைநகரமான காபூலில் புதிய ஆட்சி அமைவது மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் சுவர்களில் கோஷங்களை எழுதி வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் நகரம் முழுவதும் கொடிகளை ஏற்றி ஆங்காங்கே பேனர்களை தாலிபான்கள் நிறுவியுள்ளனர். காபூலில் அமையும் அரசு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகவுள்ளதையொட்டி தலிபான்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.