‘7 நாட்களுக்குள் இவை அனைத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’.. மீறினால் இது தான் கதி! ஆப்கானியர்களுக்கு தாலிபான் பகிரங்க எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள் ஆப்கானியர்களுக்கு துப்பாக்கிகள், வெடிமருந்துகளை ஒப்படைக்க 7 நாட்கள் காலக்கெடு அளித்துள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபத அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு படைகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ள தாலிபன்கள், அதன் பிறகே புதிய அரசாங்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளனர்.
இதனிடையே, ஆப்கனில் இசைக்கு தடை, பெண்கள் மூன்று நாட்களுக்கு மேல் பயணம் மேற்கொண்டால் பாதுகாவலர் துணையுடன் இருக்க வேண்டும் என புதிய விதிகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காபூல் நகரத்தில், போக்குவரத்து வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற அரசுப் பொருட்கள் வைத்திருக்கும் அனைவரும் அவற்றை ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட எமிரேட் அதிகாரிகளிடம் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid ட்வீட் செய்துள்ளார்.
எங்கள் உத்தரவை மீறி குறிப்பிட்ட பொருட்களை வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் Zabihullah Mujahid எச்சரிக்கை விடுத்தள்ளார்.