சடலத்தை தொங்கவிட்ட படி ஆப்கான் நகரின் மீது அமெரிக்க ஹெலிகாப்டர் பறந்ததாக பரவிய வீடியோவின் உண்மை தன்மை வெளிச்சத்திற்கு வந்தது...!
ஆப்கானிஸ்தானின் kandahar நகரில் சடலத்தை தொங்கவிட்ட படி அமெரிக்க ஹெலிகாப்டரில் தாலிபான்கள் பறந்ததாக இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய வீடியோவின் உண்மை தன்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்கப்படை வெளியேறிய சில மணிநேரங்களில் kandahar நகரில் இந்த பயங்கர சம்பவம் நடந்ததாக தகவல்கள் பரவியது.
அதுமட்டுமின்றி, அமெரிக்க செனட்டர் டெட் குரூஸ் உட்பட அமெரிக்க அரசியல்வாதிகள் பலர் குறித்த வீடியோவை பகிர்ந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க Blackhawk ஹெலிகாப்டரிலிருந்து அமெரிக்க இராணுவத்திற்காக மொழி பெயர்ப்பாளரை தலிபான்கள் தூக்கிலிட்டதாக அமெரிக்க அரசியல்வாதிகள் கூறினர்.
இந்த வீடியோ குறித்து இணையத்தில் பரவிய தகவல் அனைத்தும் பொய் என தற்போது உறுதியாகியுள்ளது.
It turns out the post I shared w/ a video of Taliban “hanging a man” from a helicopter may be inaccurate. So I deleted the tweet.
— Ted Cruz (@tedcruz) August 31, 2021
What remains accurate is:
- The Taliban are brutal terrorists.
- We left them millions in US military equipment, including Black Hawk helicopters. https://t.co/zOvNM5UXUW
குறித்த வீடியோவில் ஹெலிகாப்டரில் தொங்கிய படி பறந்தவர் தலிபான் போராளி என தெரியவந்துள்ளது.
அவர்கள், kandahar நகரில் உள்ள அரசாங்க கட்டிடத்தின் உச்சியில் தலிபான் கொடியேற்ற முயற்சித்துள்ளனர்.
பலமுறை முயற்சித்தும் அவர்களால் கட்டிடத்தின் உச்சியில் கொடியை ஏற்ற முடியாமல் போயுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் தவறான தகவலுடன் இணையத்தில் பரவியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.