காபூலில் சூழல் எப்படி இருக்கிறது.. மக்களின் மனநிலை என்ன? கருத்து கேட்டு தாலிபான்கள் வெளியிட்ட வீடியோ
நீண்ட பரபரப்புக்கு பிறகு ஆப்கான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு நகரில் நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு போராளி குழுவினர் வீடியோ வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் ஊடுருவிய தலீபான் போராளிகளுடனான பேச்சுவார்ததை தோல்வியில் முடிந்த நிலையில், ஜனாதிபதி அஷ்ரப் கானி மாளிகையை விட்டு வெளியேறினார்.
ஆளும் அரசை கவிழ்த்து ஆப்கானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். காபூல் நுழைவு வாயில்களில் சூழந்திருந்த போராளிகள் நகருக்குள் நுழைய தலீபான் தலைமை உத்தரவிட்டது.
இதனையடுத்து, தலைநகருக்கு நுழைந்த போராளிகள், காபூலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தலீபான்கள் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து, மக்கள் நகரை விட்டு தப்பி ஓடி வருவதாக செய்திகள் வெளியானது.
کابل ښار تر مدیریت لاندې دی، د اسلامي امارت ځانګړي قطعات د امنیت د تأمین په موخه د ښار په مختلفو برخو کې ځای پر ځای شوي.
— Zabihullah (..ذبـــــیح الله م ) (@Zabehulah_M33) August 16, 2021
عام خلک د مجاهدینو په ورتګ خوښي ښیي او له امنیت څخه راضي دي. pic.twitter.com/kr6i5jkhLk
இந்நிலையில், காபூல்குள் நுழைந்த தாலிபான்கள், போராளிகள் குழு ஆட்சியை கைப்பற்றியது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து தாலிபான்கள் வெளியிட்ட வீடியோவில், காபூல் நகரம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க இஸ்லாமிக் எமிரேட்ஸின் சிறப்பு படைகள் நகரின் பல பகுதிகளுக்கு முடக்கி விடப்பட்டுள்ளன.
தலீபான்களின் வருகையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் மற்றும் போராளிகள் அளிக்கும் பாதுகாப்பால் நிம்மதியடைந்துள்ளனர் என பொதுமக்களிடம் கருத்து கேட்கும் வீடியோவுடன் பதிவிட்டுள்ளனர்.