ஆப்கானிஸ்தானில் பதவியேற்பு விழாவிற்கு 6 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள தாலிபான்கள்! எந்தெந்த நாடுகள் தெரியுமா?
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு 6 நாடுகளை தாலிபான்கள் அழைப்புவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு, படிப்படிப்பாக ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாகாணத்தையும் கைப்பற்றி வந்த தாலிபான்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் திகதி தலைநகர் காபூலை தங்கள் கைவசம் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள் ஆகஸ்ட் 31-ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.
அதன் படி கடந்த 31-ஆம் திகதி அமெரிக்காவின் கடைசி படையும் அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்டு தற்போது, அங்கு முறைப்படி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் படி, இந்த ஆட்சி அமைக்கும் நிகழ்ச்சியில் 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவை ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், சவுதி அரேபியா சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தலிபான்கள் ஆட்சி நடத்திய 1990-களிலே ஆதரவு தெரிவித்தனர்.
தற்போது தலிபான்கள் நட்புப் பட்டியலில் புதிதாக சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சேர்ந்துள்ளன. கத்தாருக்கும் தலிபான்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.