10 வயது சிறுவனுக்கு தாலிபான்கள் கொடுத்த கொடூர தண்டனை! எதற்காக தெரியுமா? நெஞ்சை உலுக்கும் சம்பவம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் 10 வயது சிறுவனை துடி துடிக்க சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கு ஒவ்வொரு விதிமுறைகளையும் தாலிபான்கள் அறிவித்து வருகின்றனர்.
இருப்பினும், ஆரம்பத்தில் ஆட்சியை பிடித்த போது தாலிபான்கள், அனைத்து உரிமைகளும் எல்லோருக்கும் வழங்கப்படும்.
பெண்களுக்கான உரிமைகளை சட்டத்திற்கு உட்பட்டு வழங்குவோம். நாங்கள் மாறிவிட்டோம் என்று கூறினர். தற்போதும் அதையே தான் கூறி வருகின்றனர். ஏனெனில், சர்வதேச அளவில் தாலிபான்கள் அங்கீகாரத்தை பெறுவதற்காக இப்படி கூறி வருகின்றனர்.
இதற்காக தாலிபான்கள் தங்களின் உண்மை முகத்திரையை மறைக்க முயன்று வருகின்றனர். ஆனால் தற்போது அங்கு, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பழைய ஆட்சி முறையை தாலிபான்கள் கொண்டு வருகின்றனர்.
கடுமையான சட்டங்கள், கடுமையான தண்டனைகளை நிறைவேற்ற தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் ஹெராத் பகுதியில் 4 பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.
தொழிலதிபர் ஒருவரை கடத்தி சென்ற வழக்கில் இவர்கள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.
மக்கள் இது போன்ற குற்றங்களை செய்ய கூடாது என்பதால் அந்த நான்கு பேரில் சிலரின் உடல் பொது இடங்களில் தொங்க விடப்பட்டது.
இந்நிலையில் தற்போது அங்கு தாலிபான்கள் சிறுவன் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பஞ்சசீர் பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக முஜாகிதீனின் ஒரு அமைப்பான கொரில்லா போராளி குழுக்கள் போராடி வருகிறது.
இந்த அமைப்பை சேர்ந்தவரின் மகன் என்று சந்தேகிக்கப்படும் சிறுவனை தாலிபான்கள் கொலை செய்துள்ளனர்.
அந்த சிறுவனின் அப்பா பஞ்சசீர் போராளி குழுவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனை தாலிபான்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த சிறுவனுக்கு 10 வயது கூட ஆகவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அருகில் அந்த சிறுவனின் தங்கை அமர்ந்து கண்ணீர்விடும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.