ஆப்கானிஸ்தானை ஆளப்போவது தாலிபான்களின் இந்த 7 பேர் அணிதான்: வெளிவரும் அவர்களின் பின்னணி
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது அந்த நாட்டை ஆளப்போகும் 7 முக்கிய தாலிபான்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கைப்பற்றினர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு துருப்புகள் வெளியேறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வந்த தாலிபான்க:ள், கடந்த ஞாயிறன்று தலைநகர் காபூலுக்குள் நுழைந்தததுடன், ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் என ஆட்சி அதிகாரங்களை மொத்தமாக வசப்படுத்தினர்.
தற்போது, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யவிருக்கும் அந்த முக்கிய தாலிபான்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்களின் உச்ச தளபதியாக Haibatullah Akhundzada பொறுப்பு வகித்து வருகிறார்.
தாலிபான்களில் தலைவராக 2016ல் பொறுப்பேற்ற பின்னர் இவர் இதுவரை பொதுவெளியில் காணப்பட்டதில்லை என்றே கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக Abdul Ghani Baradar உள்ளார். தாலிபான் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான முல்லா முகமது உமர் மற்றும் ஒசாமா பின்லேடன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புடையவர் Abdul Ghani Baradar.
2010ல் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் கூட்டு முயற்சியால் இவர் சிறைபிடிக்கப்பட்டாலும், 2018ல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சர்க்காரால் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து 2020ல் டிரம்ப் அரசாங்கத்துடன் Baradar மீண்டும் ஒரு அமைதி ஒப்பந்தம் முன்னெடுத்ததன் வாயிலாக, அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
மூன்றாவது தலைவர் Sirajuddin Haqqani. இவரது குழுவினர் 2016ல் தாலிபான்களுடன் இணைந்த பின்னர், அந்த அமைப்பின் இரண்டாவது பெரிய தலைவாராக பொறுப்புக்கு வந்தார். தாலிபான்களுக்காக நிதி திரட்டும் பொறுப்பு இவருக்கானது என்றே கூறப்படுகிறது.
நான்காவதாக முல்லா ஒமரின் மகன் Mohammad Yaqoob உள்ளார். இவர் தொடர்பில் சில தகவல்கள் மட்டுமே பொதுவெளியில் கூறப்படுகிறது. இன்னொருவர் Abdul Hakim Haqqani. தலிபான்களின் பேச்சுவார்த்தை குழுவுக்கு பொறுப்பு வகிப்பவர் இவர்.
டிரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர் இவரே. 6வது தலைவராக பார்க்கப்படுபவர் Sher Mohammad Abbas Stanikzai. ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், கடந்த தாலிபான் ஆட்சி காலத்தில் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பு வகித்ததுடன், உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று வந்துள்ளார்.
7வதாக, தாலிபான்களின் முதன்மை செய்தித்தொடர்பாளராக இருக்கும் Zabihullah Mujahed. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் முதல் செய்தியாளர் சந்திப்பை முன்னெடுத்தவர் இவரே.
கடந்த 20 ஆண்டுகளில் தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் மூலமாகவே செய்தியாளர்களை இவர் தொடர்பு கொண்டு வந்துள்ளார். கடந்த 17ம் திகதி முதன் முறையாக காட்சி ஊடகங்களில் தமது முகத்தை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.