ஆப்கானில் தாலிபான்களின் புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இந்த நாடுகளுக்கு மட்டுமே அழைப்பு! எந்தெந்த நாடுகள் தெரியுமா?
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரசு பெறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அதிகாரபூர்வமாக கைப்பற்றிவிட்டனர். இதையடுத்து சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.
அவர்களின் ஆட்சி வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் புதிய ஆட்சி பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த தகவல் தாலிபான்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், நம் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள் நம் நாட்டை மறுகட்டமைப்பு செய்ய மாட்டார்கள். மக்கள் தான் ஒன்றிணைந்து அந்த செயலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.