பெண்களை வேலைக்கு அமர்த்தினால் NGO-க்கள் மூடப்படும்: தலிபான்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் பெண்களை வேலைக்கு அமர்த்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை மூட தலிபான் உத்தரவிட்டுள்ளது.
NGO-களை மூட உத்தரவு
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தேசிய மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ( NGO-க்கள்) பெண்களை வேலைக்கு அமர்த்தினால் அவற்றை மூட வேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய ஹிஜாப் அணியும் விதி முறைகளை மீறியதாகக் கூறி, பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தும்படி NGO-க்களுக்கு தலிபான் 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த சமீபத்திய உத்தரவு வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தில், ஆப்கானிஸ்தான் பொருளாதார அமைச்சகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த உத்தரவை மீறும் எந்தவொரு என் ஜி ஓ வும் நாட்டிற்குள் செயல்படும் அனுமதியை உடனடியாக இழக்கும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வை செய்வதற்கான அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தலிபானின் தொடர்ச்சியான பெண்கள் உரிமை மற்றும் சுதந்திர மீறல்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
தலிபான் அரசாங்கத்தால் நேரடியாக கட்டுப்படுத்தப்படாத எந்தவொரு நிறுவனத்திலும் பெண்கள் வேலை செய்வதை இது முழுமையாக தடை செய்கிறது.
தலிபானின் இந்த சமீபத்திய நடவடிக்கை ஆப்கானிஸ்தானை சர்வதேச சமூகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தி நாட்டிற்குள் மனிதாபிமான நெருக்கடியை அதிகரிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |