ஆப்கானிஸ்தானில் ஜன்னல்களுக்கு தடை: பெண்களை மறைக்க தலிபான்கள் எடுத்துள்ள முடிவு
பெண்கள் வெளியே தெரிவதை மறைக்க வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
ஜன்னல்களுக்கு தடை
பெண்களின் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சியாளர்கள் குடியிருப்பு கட்டிடங்களில் ஜன்னல்களை தடை செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா(Hibatullah Akhundzada) பிறப்பித்த இந்த உத்தரவு, பெண்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் போது வெளியே தெரியாமல் இருக்க வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு புதிய கட்டிடங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள கட்டிடங்கள் இரண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றம், சமையலறை, கிணறு மற்றும் பெண்கள் பொதுவாக பயன்படுத்தும் இடங்கள் போன்ற பெண்கள் இருக்கக்கூடிய இடங்களை நோக்கி ஜன்னல்கள் இருக்க கூடாது என்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லை மீறும் தலிபான்கள்
பொது இடங்களில் மட்டுமின்றி தனியுரிமை வாழ்க்கையிலும் கூட பெண்களை அழிக்கும் தலிபானின் தொடர் முயற்சிகளை இந்த உத்தரவு வெளிப்படுத்துகிறது.
இது பெண்களை மேலும் தனிமைப்படுத்தி அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |