பெண்கள் இங்கே வரவே கூடாது! தாலிபான்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை.. கண்ணீருடன் பகிர்ந்த பெண் பத்திரிக்கையாளர்
தாலிபான்கள் ஊடகத்தில் வேலை செய்யும் பெண்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ததோடு இனி ஊடகத்தில் பெண்கள் யாரும் வேலை செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசம் வந்துள்ளதால் அவர்களின் ஆட்சி கொடி கட்டி பறக்கின்றது. சில தினங்களுக்கு முன்பு பெண்கள் எப்போதும் போல படிக்கலாம் மற்றும் பணிகளுக்கு திரும்பலாம் என்று தாலிபான்கள் உறுதியளித்தனர்.
ஆனால் இனி பெண்கள் ஊடகங்களில் வேலை செய்யக் கூடாது என்றும் பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிபவர் ஷப்னம் தவ்ரான்.
இவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த தாலிபான்கள் நீ ஒரு பெண்.. வீட்டிற்கு செல் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறியது, நான் அரசு நடத்தும் செய்தி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய மறுநாள் நான் வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்றேன். இனி நீங்கள் வேலைக்கு வரக்கூடாது என்று கூறினார்கள்.
நான் எதற்கு என்று கேட்டதற்கு புதிய விதிமுறைகள் மாற்றியுள்ளதால் இனி பெண்கள் ஊடகத்தில் வேலை செய்ய கூடாது என்று தெரிவித்தனர். பெண்கள் படிப்பதற்கும் வேலைக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் முன்பு அறிவித்தபோது நான் உற்சாகமடைந்தேன்.
ஆனால் எதுவுமே மாறவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது இருக்கும் தாலிபான்களை மிகவும் கொடூரமாக உள்ளனர். எனது அடையாள அட்டையை அவர்களிடம் காண்பித்தேன்.
ஆனாலும் அவர்கள் என்னை வீட்டிற்கு செல்லுமாறு கூறினர். இது போன்ற சம்பவங்களால் ஆப்கன் பெண்கள் அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ தாலிபான்கள் மீது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.