தாலிபான்கள் ஆப்கானில் நுழைந்தவுடன் நடந்த மோசமான சம்பவம்! பீதியில் கிராம மக்கள்: வெளியான புகைப்படம்
ஆப்கானிஸ்தான் பாமியான் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹைசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரின் சிலையை தாலிபான்கள் வெடி வைத்து தகர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆப்கனிஸ்தான் மலைப்பகுதியில் வாழும் மக்கள் இனத்தை ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத் என்று அழைக்கப்படுவார்கள். கடந்த முறை தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய போது அப்துல் அலி மஸாரி ஹசாராவின் தலைவராக இருந்தார். இதையடுத்து அவரை தாலிபான்கள் 1995 ஆண்டில் மஸாரை தூக்கிலிட்டு கொலை செய்தனர்.
இதையடுத்து பாமியானில் அவருக்காக ஒரு பெரிய சிலை அமைக்கப்பட்டது. ஆனால் ஹசாரா இனத்தவரின் மீதான தீராத வெறுப்பால் ஹசாரா இன மக்களை தொடர்ந்து தலிபான்கள் துன்புறுத்தி வருகின்றனர்.
தற்போது மீண்டும் ஆப்கன் முழுவதும் தலிபான்கள் வசம் வந்துள்ளதால் ஹசாராக்கள் மீதான தாக்குதலை தலிபான்கள் தொடங்கிவிட்டனர். அதில் முதல்கட்டமாக ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலியின் சிலையை தலிபான்கள் வெடி வைத்து தகர்த்தியுள்ளனர்.
சமூக ஆர்வலர் சலீம் ஜாவித் இது குறித்து ட்விட்டரில் கூறியது, தாலிபான்கள் பாமியான் நகரில் உள்ள ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை தகர்த்துள்ளனர்.
கடந்த முறை தாலிபான்கள் ஆட்சி அமைத்த போது அப்துல் அலியை தூக்கிலிட்டு புத்தர் சிலைகளை உடைத்து, வரலாற்று சுவடுகளை தலிபான்கள் அழித்தனர். இதுதான் தலிபான்களின் கூடுதலான மன்னிப்பா என்று பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையே ஹசாரா இனத்தவர்கள் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களில் மேயர் பதவியில் பெண்கள் உள்ளனர். அதில் மாவட்ட கவர்னர் சலிமா மஸாரியை தலிபான்கள் சிறைப்படுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.