பேச்சுவார்த்தை தோல்வி... தலிபான்களுக்கும் எதிர்ப்பு படையினருக்கும் இடையே வெடித்தது மோதல்!
ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கும் எதிர்ப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. எனினும், பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை.
தலிபான்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட எதிர்ப்பு படையினர் ஆதிக்கத்தில் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு உள்ளது.
இந்த எதிர்ப்பு படையின் தலைவர் அகமது மசூத். இவரது தந்தை அகமத் ஷா மசூத் ஏற்கெனவே தலிபான்களால் கொல்லப்பட்டவர்.
தலிபான்களுக்கு எதிராக போராடுவோம் என்றும் சரணடையமாட்டோம் என்றும் அகமது மசூத் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அதேசமயம், அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை வழங்கி, அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைத்தால் தலிபான்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்துவதாக திர்ப்பு படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்தார்.
தலிபான்கள் அவர்கள் உருவாக்க முயற்சிக்கும் அரசாங்கத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களை எதிர்ப்புப் படைகளுக்கு வழங்க சம்மதித்ததாக கூறப்படுகிறது, ஆனால் எதிர்ப்பு படையினர் அதை நிராகரித்துள்ளனர்.
இதனால், தலிபான்கள் எதிர்ப்பு படையினருக்கு எதிரான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
Fighting has been raging in Panjshir Valley since last night. So far, more than a dozen posts have been taken by the government. In the photo, taken this morning, a checkpoint on the top of the mountain appears to have caught fire. pic.twitter.com/yqvC9DYhoX
— Muhammad Jalal (@MJalal700) September 2, 2021
இதனையடுத்து, பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் நேற்று இரவு முதல் சண்டை நடந்து வருகிறது. இதுவரை, பத்துக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அரசாங்கத்தால் (தலிபான்களால்) கைப்பற்றப்பட்டுள்ளன என தலிபான் அதிகாரி முஹம்மது ஜலால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.