வீடு வீடாக.. தேடி.. தேடி பழி தீர்க்கும் தலிபான்கள்... உயிர் பயத்தில் தவிக்கும் மக்கள்! ஐ.நா அதிர்ச்சி தகவல்
தலிபான்கள், எதிரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தை வீடு வீடாக தேடி வருவதாக ஐ.நா அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, ஆப்கானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும், கல்வி கற்கலாம், வேலைக்குச் செல்லலாம்.
அமெரிக்க,மேற்கத்தியப் படைகளுடன் இணைந்து எங்களை எதிர்த்த மக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குகிறோம் என தலிபான் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா வன்முறை மதிப்பீட்டு ஆலோசகர்களின் ரகசிய ஆவணம் படி, அமெரிக்க, நேட்டோ படைகளுடன் பணியாற்றிய நபர்களை குறிவைத்து தலிபான்கள் வீடு வீடாகச் சென்று தேடி வருகிறார்கள் என உறுதிப்படுத்தியுள்ளது.
காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் மக்களையும் போராளிகள் வழிமறித்து சோதனை செய்து வருகின்றனர்.
சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் நபர்களையும், அவர்களின் குடும்பங்களையும் பிடித்து, ஷரியத் சட்டப்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டிக்கின்றனர்.
நேட்டோ,அமெரிக்கப் படைகள் மற்றும் அவர்களின் கூட்டுப் படைகளுடன் பணிபுரிந்த நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தலிபான்காளல் சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் மரணதண்டனைக்கு ஆளாக நேரிடும் என ஐ.நா-வில் அறிக்கை சமர்பித்த உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான நோர்வே மையம் தெரிவித்துள்ளது.