இனி ஆப்கானிஸ்தானில் இந்த சட்டம் தான்! தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு: கடும் அதிர்ச்சியில் மக்கள்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி வரும் நிலையில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து தீவிரவாதிகளின் தலைவர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
நேற்று ஜலாலாபாத்தில் தாலிபான்களுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்து பர்தா அணியாத 3 பெண்களை பரிதாபமாக சுட்டு கொலை செய்தனர்.
இது குறித்து தாலிபான் பயங்கரவாதிகளின் மூத்த தலைவர் வாஹித்துல்லா ஷாஷ்மி செய்தி நிறுவனங்களிடம் பேட்டி அளித்தார். அதில், இனி ஜனநாயகத்திற்கு இடமில்லை என்றும் ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டம் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
ஏனெனில் நாட்டில் ஜனநாயகத்திற்கான அடிதளமே இல்லை. அப்படியிருக்கும் போது ஆப்கானிஸ்தான் ஏன் ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்று கிண்டலாக கூறினார்.
கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள்தான் ஆட்சி செய்தனர். அப்போது எப்படி ஆட்சி ஆட்சி செய்யப்பட்டதோ அப்படியே இந்த முறையும் ஆட்சி செய்யப்படும். அப்போது மூத்த தலைவர் முல்லா உமர் எங்களுக்கு நிழலாக இருந்தார்.
நாட்டின் அன்றாட நிர்வாகம் குறித்து ஆட்சி மன்றக் குழுவே பார்த்துக் கொள்ளும். நாட்டின் அதிபர் இந்த குழுவின் தலைவராக அக்குன்ஜாடா இருப்பார் என தெரிகிறது.
மேலும் புதிய அரசு அமைவது தொடர்பாக தீவிர ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்தார். தாலிபான்களின் இந்த அறிவிப்பு அங்கிருக்கும் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஏனெனில் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானே மாறியிருந்த நிலையில், மீண்டும் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றால் அவர்கள் நிலை மிகவும் வேதனைக்குரியது என்பதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.