ஆப்கான் விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை! மீறினால்.. கடும் எச்சரிக்கை விடுத்த தாலிபான்கள்
ஆப்கான் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்று தாலிபான்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது.
இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆப்கானின் முக்கிய நகரமான காபூலை தலீபான்கள் தங்களின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்க அவர்கள் தீவிர முனைப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பாகிஸ்தானின் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் ஃபயிஷ் ஹமீது காபூல் சென்று தாலிபான்களை சந்தித்து இரண்டு நாடுகளின் வளர்ச்சியை குறித்து பேசியாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் இவர்களின் சந்திப்பு குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, பாகிஸ்தான் தலைவர் எங்களை சந்தித்தது உண்மை தான். இந்த சந்திப்பில் இரண்டு நாடுகளின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது.
மற்றபடி ஆப்கன் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தான் உட்பட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதுபோல நாங்கள் பாகிஸ்தான் குழுவை சந்திக்க அழைக்கவில்லை. அவர்களாகவே எங்களை தேடி வந்து சந்தித்தாக கூறியுள்ளார்.