கோரமுகத்தை காட்டும் தாலிபான்கள்! பெண்களுக்கு விதித்த புதிய கட்டுப்பாடு.. சொன்ன காரணம்
ஆப்கன் பெண்களை பணிக்கு செல்ல வேண்டாம் என்று தாலிபான்கள் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களையும் தனது வசமாக்கிய தாலிபான்கள் புதிய ஆட்சியை தொடங்க மும்முரமாக பல நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 31ஆம் திகதிக்குள் அமெரிக்க ராணுவ படைகளை வெளியே செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எங்களுடைய படைகளுக்கு பயிற்சி அளிக்கும் வரை வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலே இருக்க வேண்டும் என்று தாலிபான்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் கூறியது, எங்களின் படைகளுக்கு பெண்களிடம் எப்படி பேசுவது, எப்படி நடந்து கொள்வது போன்றவை தெரியவில்லை.
அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். எனவே பெண்களுக்கு பாதுக்காப்பான சூழல் மாறும் வரை பெண்களை வீட்டிலே இருக்குமாறும், பணிகளுக்கு செல்ல தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளார்.
நாங்களும் பெண்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம் என்று உலகத்தை நம்ப வைக்க தாலிபான்கள் செய்யும் சூழ்ச்சி என்று பலர் கூறிவருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் பெண்கள், சிறுமிகளை வீடு வீடாக சென்று கடத்தி கட்டாய கல்யாணம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.