எல்லை மீறும் தாலிபான்கள்! போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்
ஆப்கானிஸ்தானில் பாட்டு கேட்டுக்கொண்டு சென்று கொண்டிருந்த இளைஞரை மடக்கி துப்பாக்கியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதால் அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். ஒருபக்கம் பெண்களுக்கு எதிராக பல கொடூரங்கள் அரங்கேறி வரும் நிலையில் ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர்.
ஆண்கள் தங்கள் தாடியை ஷேவ் செய்தால் அவர்களை பயங்கர சித்ரவதைக்கு உட்படுத்தி கொலை செய்து வருகின்றனர். இந்த கொடூரங்களை தாங்க முடியாத அப்பாவி ஆப்கன் மக்கள் உயிரை காத்துக்கொள்ள பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இதுவரை நடந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள கடை வீதியில் இளைஞர் ஒருவர் போனில் பாட்டு கேட்டு கொண்டு சென்றிருந்தார். அப்போது அவரை மடக்கிய தாலிபான்கள் துப்பாக்கி நுனியால் மார்பை குத்தியுள்ளார்.
மற்றொருவர் அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் ஒரு சில நேரம் கழித்து அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இது போன்ற அட்டகாசங்களை தாலிபான்கள் செய்து வருகின்றனர்.